Thursday 8 May 2014

Om Sanggili Karupparaya Namaha

நடமாடும் தெய்வம்!

அருள்மிகு கருப்பசாமி - மகத்தான இந்தக் காவல் தெய்வத்தின் தோற்றம், வரலாறு, கோயில்கள் குறித்த தகவல்களுடன், இவருக்கும் சுவாமி ஐயப்பனுக்குமான வழிபாட்டுத் தொடர்புகளையும் விரிவாக விவரிக்கிறது, சுவாமி ஓங்காரனந்தர் எழுதிய, 2000 பக்கங்கள் கொண்ட 'அருள்மிகு கருப்பசாமி - ஒரு நடமாடும் தெய்வம்' எனும் நூல்.

'நம் தேசத்தைக் காத்து நிற்கும் இருபெரும் காவல் தெய்வங்கள் ஸ்ரீஆஞ்சநேயரும் ஸ்ரீகருப்பசாமியுமே' என்பன போன்ற விளக்ககங்களுடன், அபூர்வ பாடல்களை மேற்கோள்காட்டி, நூலாசிரியர் சுவாமி ஓங்காரனந்தர் ஆய்ந்து தரும் தகவல்கள், ஐயப்பமார்களுக்கு பெரிய வரப் பிரசாதம்! இனி நூலில் இருந்து சில தகவல்கள்...

'அருள்மிகு கருப்பசாமி எனும் கருப்பண்ணசாமி, மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவல்களாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி' எனும் ஸ்ரீகருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழ்ந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.

கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தில், கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு.

நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்... இப்படிப் பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம்.

கருப்பண்ணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள் - சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர்.

கருப்பசாமி தியான ஸ்லோகம்:
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்;
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும

No comments:

Post a Comment