Thursday, 7 March 2013



பிரதோஷ விரதமாவது யாது?

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுடடித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)


331.
பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைசசேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

332.
பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும

No comments:

Post a Comment