Friday, 9 May 2014

Agora Veerabathirar



அகோர வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாக கருதப்படுகிறார். வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். சிவபுராணம், மகாபாரதம், கந்த புராணம், திருச்செந்தூர்ப்
புராணம், வாயு புராணம் போன்ற புராணங்கள், வீரபத்திரர் சிவனிடமிருந்து எவ்வகையில் தோன்றியது என்பதை விளக்கியுள்ளன தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறார். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம்,கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களில் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”



No comments:

Post a Comment